மறைந்த முன்னாள் பிரதமர் சௌதிரி சரண் சிங் பிறந்தாளையொட்டி அவரை நினைகூறும் விதமாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், " 2010-11ஆம் ஆண்டில் ரூ. 91 ஆயிரமாக இருந்த மேற்கு வங்க விவசாயிகளின் ஆண்டு வருமானம், 2018ஆம் ஆண்டில் 2.91 லட்சமாக (மூன்று மடங்கு ) உயர்ந்துள்ளது.
அதேபோன்று, 2011ஆம் ஆண்டில் 27 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கிசான் (விவசாயிகள்) அட்டை, 2019ஆம் ஆண்டில் 69 லட்சம் விவசாயிகளுக்கு ( இரண்டரை மடங்கு அதிகம்) விநியோகிக்கப்பட்டுள்ளது.
கிரிஷாக் பன்தூ என்ற திட்டம் மூலம் மேற்கு வங்க அரசு விவசாயிகளுக்கு நிதி உதவியும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 72 லட்ச விவசாய குடும்பத்தினர் பயனடைவர். அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் உதவியின்றி, மாநில அரசு தன்னிச்சையாக பயிர் காப்பீடு திட்டத்தையும் செயல்படுத்துகிறது" என்றார்.
இதையும் படிங்க : ஆண்டுக்கு 83 லட்சம் உயிர்களை விழுங்கும் மாசுபாடு!