கர்நாடக பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா, மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் நாகண்ணகவுடாவின் மகன் சரண்கவுடாவை ஆய்வு பங்களாவில் சந்தித்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் சரண்கவுடா அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி சொல்லிதான் தன்னை சந்திக்க வந்ததாக எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய எடியூரப்பா, "சரண்கவுடா பதிவு செய்த ஆடியோ கிளிப்பை தங்களின் கதைக்கேற்ப வெட்டியுள்ளார். குமாரசாமி புதிதாக கீழ்த்தரமான அரசியலில் இறங்கியுள்ளார்.
சரண்கவுடாவிடம் தான் பேசிய முழு உரையாடலையும் அவர்கள் வெளியிடவில்லை" என தெரிவித்தார்.
இதற்கு முன் அந்த ஆடியோ பதிவு போலியானது என்றும், தான் எந்த தலைவரையும் சந்திக்கவில்லை என்றும் எடியூரப்பா தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.