புதுச்சேரியில் கடந்த 12ஆம் தேதி சூப்ரீன் வீதியிலுள்ள தலைமை பாரத ஸ்டேட் வங்கியில் அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் அறையில் நள்ளிரவில் அடையாளம் தெரியா நபர் ஒருவர் பணத்தை எடுக்க முயற்சித்தார்.
இது குறித்து தகவலறிந்த ஹைதராபாத் தலைமை அலுவலகத்திலிருந்து புதுச்சேரியில் உள்ள எஸ்பிஐ வங்கி மேலாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்ததன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஏடிஎம் அறையில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் ஆதிச்சனூர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்ற இளைஞரைப் பெரியக்கடை காவல் துறையினர் கைதுசெய்தனர். ஏடிஎம் கொள்ளை முயற்சிக்குப் பயன்படுத்திய கத்தியையும், அவன் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க: மதுபாட்டில்கள் திருடிய மூன்று பேர் கைது!