புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் பின் எண் அழுத்தும் பகுதியில் மேல் பகுதியில் எண்களை பதிவு செய்யும் போது, கண்காணிக்கும் பிளாஸ்டிக்கில் ஆன பொருட்களை சிலர் வடிவமைத்து ஒட்டியுள்ளனர். அதனுடன் சிப் ஒன்றும் பொருத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அந்த ஏடிஎம்முக்குச் சென்ற நபர் ஒருவர் அதனைப் படம் பிடித்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளார். பொதுமக்கள் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். இது எதற்காக ஒட்டப்பட்டுள்ளது என்றும் தெரியாத நிலையில் இது புதுச்சேரியில் வைரலாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு: மேலும் இரண்டு விஏஓ-க்கள் கைது