கரோனா சூழலில் ஒரு மனிதனின் மரணம் என்பது பெருந்தொற்றின் தீவிரத்தை உறுதிப்படுத்தவும், சமூகம் இந்த நோய்க்கான எதிர்ப்பு சக்தியை பெறுவதற்கு முன் எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை கணிக்கவும் மட்டுமே பயன்படுகிறது. தங்கள் நாட்டில் குறைந்த இறப்பு விகிதம் இருப்பதைக் கண்டு மக்கள் ஆறுதல் அடைகின்றனர். இறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் நாம் மரணத்தில் இருந்து தப்பிவிட்டோம் என்ற எண்ணம் மக்கள் மனதில் தோன்றத் தொடங்கியுள்ளது.
இது இறந்த மக்களின் புள்ளிவிவரங்களை நம்மிடமிருந்து மறைக்கிறது. இத்தாலியில் உயிரிழந்தவர்களின் வயது சராசரியாக 70-க்கும் அதிகமாக உள்ளது. ஆனால் அமெரிக்காவில் இந்த நிலை வேறு, வெள்ளையின மக்கள் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். கரோனாவால் உயிரிழந்தவர்களை புதைப்பது தனி செயல்பாடாக மாறிவிட்டது. சுய தனிமைப்படுத்துதலில் உள்ளவர்கள், தங்களுக்கு நெருங்கியவர்களின் இறுதிச் சடங்கை கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இறந்த 65 வயது முதியவர் ஒருவரின் எண் 252, அரசு அலுவலர்கள் அவரது உடலை அகற்றும்போது ஒரு உறவினர்கள் கூட உடனில்லை. மரணம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையை அவன் உறவினர்களும் நண்பர்களும் நினைவுகூர்ந்து பார்க்கும் தருணமாக இருக்கிறது. ஆனால் கரோனா அச்சத்தால் இந்த சூழல் மாறியுள்ளது.
வாழ்க்கையையும் மரணத்தையும் பற்றிய கேள்விகள் இந்தியர்களின் மனங்களை அரித்துத் தின்று கொண்டிருக்கின்றன. இந்தியாவில் என்ன நடக்கிறது? பெருந்தொற்று வளர்கிறதா அல்லது தேய்கிறதா - உண்மையில் எத்தனை பேர் இறந்தார்கள்? என பல கேள்விகள் நம் மனதை உலுக்கிக்கொண்டிருக்கின்றன.
இந்த கேள்விகள் மக்களை தங்கள் சொந்த பார்வையில் இதனை அணுகச் செய்கிறது. தொற்று நோய் நிபுணர்கள், கணிதவியல் அறிஞர்கள், பொறியாளர்கள் என பலரும் தங்கள் அறிவுத் திறனை பயன்படுத்தி இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. கரோனா வைரஸ்தான் இந்த சமூகத்தின் மிகப் பெரும் கொலையாளியா? கரோனா வருவதற்கு முன்பு நாம் என்ன செய்துகொண்டிருந்தோம். இயற்கையை சேதப்படுத்துவது, காற்றை மாசுபடுத்துவது என மனித இனத்தின் அழிவுக்கு நாமும்தான் வழிவகுத்துக் கொண்டிருந்தோம்.
இந்த சூழலில் விபத்துகள் அதிகமாக ஏற்படவில்லை. ஊரடங்கால் தங்கள் ஊர்களுக்கு நடைபயணம் மேற்கொண்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிலர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். அதேபோல் பஞ்சாப்பை சேர்ந்த காவலர் ஒருவர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்தால் உயிரிழந்தார். இதுபோன்று விபத்தில் சிக்கியவர்களுக்கு மருத்துவமனையின் கதவுகள் மூடிக்கிடக்கிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நிரம்பியிருக்கின்றனர். கேன்சர் நோயாளிகள் கூட கீமோதெரபி சிகிச்சைக்கு பின் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.
டெல்லி தெருக்களில் தவிக்கும் சிலர், மருத்துவமனையில் இருந்து விரட்டப்பட்டவர்களாகக் கூட இருக்கலாம். கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தவிர வேறு வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் இடம் கிடையாது என துறை சார்ந்த அமெரிக்க அலுவலர் தெரிவிக்கிறார்.
இந்த சூழலில் மக்கள் மீண்டும் இணைய சில காலம் ஆகலாம். ஆனால் ஊரடங்கால் இறப்பு விகிதம் குறைகிறதா? லக்னோவில் உள்ள ஒரு சுடுகாட்டில் கடந்த 30 நாட்களில் 1100-க்கும் அதிகமான உடல்கள் தகனம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த இறப்புகளுக்கு ஒருவர் என்ன காரணம் கூற முடியும்? இந்தியாவில் நெஞ்சு வலியாலும், இருதயக் கோளாறாலும்தான் அதிகமான மரணங்கள் நிகழ்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் மருத்துவ முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். வீட்டிலேயே இருப்பதும் பலரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி நோயாளியாக மாற்றுகிறது. மருத்துவத் துறை அதிகமான பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இறந்தவர்களின் உடல்களில் நோய்த்தொற்று இருப்பின், சடங்குகள் மாற்றப்படுவது போல மருத்துவத் துறை மற்ற நோயால் பாதிக்கப்படுபவர்களின் உயிருக்கும் மதிப்பளித்து, புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.