கோவிட்-19 பரவல் அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தீவிரமாக பரவிவருகிறது. கோவிட்-19 பரவலைப் புரிந்துகொள்ள உலகெங்கும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், கோவிட்-19 பரவல் குறித்து நடைபெற்ற ஆராய்ச்சியில் அறிகுறிகள் தென்படாத நோயாளிகள் மூலம் கரோனா பரவல் குறைவாகவே உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 1473 நோயளாகிளிடம் நடத்தப்பட்ட சோதனையில் இது தெரியவந்துள்ளதாக ஐஎம்சிஆர் தெரிவித்துள்ளது.
மேலும், இது குறித்து ஐஎம்சிஆர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சமீபத்திய ஆய்வுகளில், அறிகுறியற்ற நோயாளிகள் மூலம் மற்றவர்களுக்கு கரோனா பரவ 0-2.2 விழுக்காடு வாய்ப்புள்ளது. மேலும், அறிகுறி வெளிப்படுத்தும் நபர்கள் மூலம் கரோனா மற்றவர்களுக்கு பரவுது என்பது 0.8 முதல் 15.4 விழுக்காடாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது வரை 35,46,705 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 63,690 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: அன்லாக் 4.0: ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு