ETV Bharat / bharat

திறந்தவெளியில் நடைபெறும் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர்! - புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து

புதுச்சேரி: சட்டப்பேரவை உறுப்பினருக்கு கரோனா ஏற்பட்டதைத் தொடர்ந்து, தரைத் தளத்திலிருந்த சட்டப்பேரவை அரங்கு மூடப்பட்டு, நான்காவது மாடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அத்துடன் சட்டப்பேரவை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, திறந்தவெளிப் பகுதியில் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது.

Puducherry assembly building
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம்
author img

By

Published : Jul 25, 2020, 1:05 PM IST

புதுச்சேரியில் முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் கடந்த திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து தரைத் தளத்திலிருந்த சட்டப்பேரவை அரங்கு தற்போது மூடப்பட்டு, நான்காவது மாடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுவருகிறது.

Puducherry assembly
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் கிருமி நாசினி தெளிப்பு

அத்துடன் சட்டப்பேரவை வளாகத்துக்குள் வருகைதரும் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

Puducherry assembly
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வருபவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை

செய்தியாளர்களைச் சந்தித்த சட்டப்பேரவை தலைவர் சிவக்கொழுந்து, “சட்டப்பேரவை கூட்டத்தைத் திறந்தவெளிப் பகுதியில் தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினருடன் தொடர்பிலிருந்த அனைத்துச் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அலுவலர்கள், சட்டப்பேரவை வளாக ஊழியர்கள் என அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதேபோன்று சட்டப்பேரவை வளாகத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என்றார்.

இதையடுத்து சட்டப்பேரவை வளாகத்தின் திறந்தவெளிப் பகுதியில் 12.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு கரோனா - முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினருக்குப் பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.