மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கடந்த சில வாரங்களாக அந்த இரண்டு மாநிலங்களிலும் நடைபெற்ற பல்வேறு கட்சியினரின் தேர்தல் பரப்புரையினால், தேர்தல் களம் பரபரப்புடன் இருந்தது. அந்த இருமாநில சட்டமன்ற தேர்தலுடன் நாட்டின் 17 மாநிலங்களில் காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று நடக்கிறது.
தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி என இரண்டு தொகுதிகள், பஞ்சாபில் நான்கு தொகுதிகள், ராஜஸ்தானில் இரண்டு தொகுதிகள் உட்பட மொத்தம் 51 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 11 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தொகுதிகளிளுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். இரண்டாவது முறை பிரதமராக மோடி பதவியேற்ற பின்பு இரு பாஜக ஆளும் மாநிலங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இரு மாநில தேர்தலும் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆளும் பாஜக அரசு மீண்டும் அறுவடை செய்யுமா என்பதை நாடே உற்றுநோக்கியுள்ளது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி: மல்லிகார்ஜூன கார்கே நம்பிக்கை!