வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் ஜூன் மாதம் மழைக்காலம் ஆகும். அஸ்ஸாம் ஆற்றங்கரை ஓரங்களில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
சமீப காலமாக கரையோரங்களில் மணல் அரிப்பு ஏற்படுவதால், ஆற்றுநீர் எப்போது தங்கள் வீடுகளுக்குள் வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே அந்த மக்கள் உள்ளனர். ஏற்கெனவே கரோனா வைரஸின் அச்சத்தோடு வாழும் தாங்கள், தற்போது வெள்ளம் குறித்த அச்சத்துடனும் வாழ்வதாக அஸ்ஸாம் ஆற்றங்கரையோர மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, ஆற்றின் கரைகளைப் பலப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் வெள்ளம் வந்தால், தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் படகுகளையும் அஸ்ஸாம் ஆற்றங்கரையோர மக்கள் தயார் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு அஸ்ஸாமில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கனோர் வீடுகளை இழந்து தவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வெள்ளம் பாதித்த 121 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிய ராமோஜி குழுமம்