ETV Bharat / bharat

இரு மாநில காவல் துறையினர் இடையே வாக்குவாதம்; அசாமில் பரபரப்பு

author img

By

Published : Feb 21, 2020, 7:37 AM IST

திஸ்பூர்: ராணுவ முகாமை அமைக்கச் சென்ற அசாம் காவல் துறையினருடன் மேகாலயா காவல் துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு மாநில காவல்துறையினர்!

அசாம் மாநிலம் லம்பி என்ற கிராமத்தில் ராணுவ முகாம் ஒன்றினை அமைக்க அம்மாநில காவல் துறை ஆய்வு மேற்கொண்டது. அப்போது, அங்கு வந்த மேகாலயா காவல் துறையினர், அப்பகுதி தங்கள் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் அசாம் மாநிலத்தின் கட்டுப்பாட்டில்தான் அந்த கிராமம் உள்ளது.

அசாமின் கம்ரூப் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்சிப் சைகியா தலைமையில் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த வாக்குவாதம் நான்கு மணி நேரம் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. சமீப காலமாகவே, இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லை தொடர்பாக பிரச்னைகளைச் சந்தித்துவரும் நிலையில், தற்போது இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ‘எரிமலை ஓரத்தில் மோடி மகுடி வாசிக்கிறார்’ - வைகோ காட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.