ETV Bharat / bharat

'அஸ்ஸாம் வெள்ளத்திற்கு மத்திய அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்': ஆளுநர் ஜக்தீஷ் முகி! - அசாம் மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனோவால்

ஒவ்வொரு ஆண்டும் அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை நிரந்தரமாக தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஜக்தீஷ் முகி தெரிவித்துள்ளார்.

assam-floods-death-toll-rises-to-119-as-4-more-die

author img

By

Published : Jul 24, 2020, 5:10 PM IST

அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 119ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மீட்பு ஆணையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெள்ளத்தால் 26 மாவட்டங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அதில் 28.32 லட்சம் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இதனிடையே திப்ருகார், தூப்ரி, கோல்பாரா, திஸ்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரம்மபுத்ரா நதியின் நீர்மட்டம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை ஆளுநர் ஜக்தீஷ் முகி பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அதனைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளால் மாநிலத்தின் சமூகப் பொருளாதார நிலை மோசமடைந்து வருகிறது. ஆண்டுதோறும் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியாது. இதனை மத்திய அரசு கையில் எடுத்து நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும்.

அஸ்ஸாம் மாநில மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வரும் நதிகளான பிரம்மபுத்ரா, ஜியா பராலி, கோபிலி, பேகி உள்ளிட்ட நதிகளைக் கட்டுப்படுத்த நீண்ட ஆய்வு நடத்தப்பட வேண்டும். மாநிலத்தில் உள்ள விலங்குகளின் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்'' என்றார்.

வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு

இதனிடையே அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனோவால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டாரங் மற்றும் கம்ரூப் மாவட்டங்களில் ஆய்வு நடத்தினார். அதையடுத்து அவர் பேசுகையில், ''நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களைச் சந்தித்தேன். அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம், பலரின் வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்டுள்ளது. ஒரே நேரத்தில் கரோனா வைரஸ், வெள்ளம், புயல், நிலச்சரிவு, பக்ஜன் தீ விபத்து என இயற்கை பேரிடர்களை அஸ்ஸாம் எதிர்கொண்டு வருகிறது'' என்றார்.

இதையும் படிங்க: வெள்ளம் பாதித்த அஸ்ஸாமுக்கு முதல்கட்ட நிதியாக ரூ. 346 கோடி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.