ETV Bharat / bharat

அஸ்ஸாம் வெள்ளம்: 3 லட்சம் பேர் பாதிப்பு - தமிழ் செய்திகள்

திஸ்பூர்: அஸ்ஸாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Assam flood situation
Assam flood situation
author img

By

Published : May 28, 2020, 3:38 PM IST

அஸ்ஸாமில் ஏற்பட்ட வெள்ளத்தால் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. 11 மாவட்டங்களில் வெள்ளத்தினால் மூன்று லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கையில் இன்று (மே 28) கூறியுள்ளது.

இது குறித்து அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது;

"கோல்பாரா மாவட்டம் ரோங்ஜுலி என்ற இடத்தில் ஒருவர் உயிரிழந்தார். தற்போது இந்த வெள்ளத்தால் தேமாஜி, லக்கிம்பூர், நாகான், ஹோஜாய், டாரங், பார்பேட்டா, நல்பாரி, கோல்பாரா, மேற்கு கர்பி அங்லாங், திப்ருகார், டின்சுகியா போன்ற மாவட்டங்களில் 2.72 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோல்பாரா மாவட்டத்தில் 2.15 லட்ச மக்களும், நல்பேரி மாவட்டத்தில் 22 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், நாகான் மாவட்டத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1.95 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீதமுள்ள மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை ஒன்பது பேரை மீட்டுள்ளது. அதேநேரம் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது 321 கிராமங்கள் நீரில் மூழ்கின. 2,678 ஹெக்டேர் பயிர் நிலங்கள் சேதமடைந்துள்ளன. முக்கியமான சாலைகள், பாலங்கள் என அனைத்து சேதமடைந்துள்ளன.

வெள்ளத்தால் மோசமாகும் அஸ்ஸாம்

இதுவரை ஐந்து மாவட்டங்களில் 57 நிவாரண முகாம்கள், அத்தியாவசிய விநியோக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 16,720 பேர்கள் தஞ்சமடைந்துள்ளனர். திமா ஹசாவோ என்ற மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் 30 வீடுகள் சேதமடைந்து 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவு காரணமாக அவ்வழியாக செல்லும் ரயில் தடங்கள் பாதிக்கப்பட்டு கடந்த 26ஆம் தேதி செல்லயிருந்த மூன்று சிறப்பு ஷ்ராமிக் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இது குறித்து அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நிவாரண முகாம்களில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசம், கை கழுவும் கிருமி நாசினி, தகுந்த இடைவெளி பின்பற்றுதல் சரியாக கடைபிடிக்க வேண்டும். அதேபோல் வெள்ளத்தால் உயிரிழந்தால் அடுத்த 48 மணி நேரத்தில் அவர்களது குடும்பத்திற்கு நிவாரணத் தொகை சென்றடைய வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தற்போது முதல்கட்டமாக 386 கோடி ரூபாயை மாநில பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்கிடையில், ஆளுநர் ஜெகதீஷ் முகியை அழைத்து மாநிலத்தில் நிலவும் வெள்ள நிலைமை குறித்தும், கரோனா தொற்று நிலைமையை சமாளிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் சோனாவால் விளக்கினார்". இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: வெட்டுக்கிளிகள் தாக்குதல் முன்னெச்சரிகை நடவடிக்கை - விவசாய அமைச்சர் அருண் சாஹூ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.