ETV Bharat / bharat

அஸ்ஸாம் பெருவெள்ளத்தால் சேதமடைந்த பூங்கா - பரிதவிக்கும் விலங்குகள்

author img

By

Published : Jul 1, 2020, 6:47 PM IST

கவுகாத்தி: வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்கா 90 விழுக்காட்டிற்கும் மேல் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

assam-flood-14-animals-including-a-one-horned-rhinoceros-dead-in-kaziranga-national-park

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் வெள்ளத்தில், கிட்டத்தட்ட மாநிலத்தின் 25 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்பில் நேற்று மாலை வரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், பல்வேறு பொதுச் சொத்துகளும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த 223 முகாம்களில் 143 முகாம்கள் நீரில் மூழ்கின. பூங்காவிலுள்ள ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் உள்ளிட்ட 14 விலங்குகள் வெள்ளத்தால் உயிரிழந்துள்ளன. விலங்குகளின் பாதுகாப்பிற்காக பூங்காவிலுள்ள உயரமான பகுதியில், தற்போது விலங்குகள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், சாலை விபத்துகளில் விலங்குகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களின் வேகவரம்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மீறுபவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்தப் பூங்கா ஒன்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்கான உலகின் மிகப்பெரிய பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனாவால் மீண்டும் தள்ளிப்போகும் கலிபோர்னியா டிஸ்னி அட்வென்ச்சர் பார்க் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.