ETV Bharat / bharat

திருமண நிகழ்விற்குச் சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம் - 5 பேர் உயிரிழப்பு

டிஸ்பூர்: உடல்குரி மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியபோது வாகனம் விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

assam accident
assam accident
author img

By

Published : Mar 14, 2020, 6:18 PM IST

அசாம் மாநிலம் உடல்குரி மாவட்டம் நசான்சலி பகுதியில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர மரத்தில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த வாகனம் கடுமையாகச் சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20 பேர் காயமடைந்தனர். அனைவரும் மங்கல்டாய் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில், பலத்த காயமடைந்த 14 பேர் மேல் சிகிச்சைக்காக கவுகாத்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

'விஷால் உனக்கு இருக்கு ஆப்பு'- இயக்குநர் மிஷ்கின் ஆவேசம்

திருமணமான புதுப் பெண்ணைப் புகுந்த வீட்டில் விட்டுவிட்டு உறவினர்கள் வீடு திரும்பும்போது விபத்து ஏற்பட்ட இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் சர்பானந்த சோனோவல் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.