அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களிலும் பிகாரிலும் கனமழை காரணமாக கடந்த வாரம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில், வெள்ளநீர் சூழ்ந்த சுமார் 4,128 கிராமங்கள், ஆயிரக்கணக்கான ஹெக்டர் பரப்பளவு விவசாய நிலங்கள் மூழ்கின. ஏறக்குறைய 60 லட்சம் பேர் தங்களது வீடுகளையும், உடமைகளையும் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாம் மாநிலத்தில் 64 பேரும், பிகாரில் 102 பேரும் என மொத்தம் இதுவரை 166 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.
தற்போது இரு மாநிலங்களில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள போதும், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பைத் தடுக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.