அசாம் மாநிலம் நிதய்நகர் கிராமத்தில் 4 பேர் கும்பல் வன்முறைக்கு உள்ளானார்கள். இந்த சம்பவத்தின்போது பல கிராமத்தினருக்கு படுகாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து அவர்களை காப்பாற்ற பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் உட்பட 12 பேர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர். அப்போது, கும்பல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் காப்பற்ற வந்தவர்களை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
தாக்கப்பட்டவர்கள் குழந்தையை திருட வந்தவர்கள் என எண்ணியதால் அவர்கள் கும்பல் வன்முறைக்கு உள்ளாகியிருக்கலாம் என காவல்துறை தரப்பு தகவல் தெரிவிக்கிறது. ஹேமந்தகுமார் தாஸ், அசோக் சக்கரபர்த்தி, போரத் சந்திர கார் ஆகிய காவல்துறையினரும் இரண்டு பாதுகாப்பு படையினரும் கும்பல் வன்முறையில் கடுமையாகி தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கும்பல் வன்முறைகளை தடுக்கும்படி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவந்த நிலையில், பிரதமரே அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை கடுமையாக விமர்சித்தார். ஆனாலும் இந்த கும்பல் வன்முறைகளுக்கு பாதுகாப்பு படையினரே ஆளாகியிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.