உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் நர்ஹார்பூர் காசியாஹியாவைச் சேர்ந்த தர்மேந்திரா பிரதாப் சிங், இந்தியாவின் உயர மனிதனாக திகழ்ந்து வருகிறார். பேரும் புகழும் கொட்டிக்கிடக்கும் தர்மேந்திராவால், வாழ்க்கை துணையை நீண்ட நாள்களாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரின் உயரத்துக்கு ஏற்ற மணப்பெண் இன்னமும் கிடைக்கவில்லை எனத் தர்மேந்திரா வேதனை தெரிவிக்கிறார்.
தர்மேந்திராவின் உயரம் பலவிதமான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. அவரது காலுக்கு பொருந்தக்கூடிய ஒரு ஸ்லிப்பர் சந்தையில் இல்லாததால், சொந்தமாக செருப்பை செய்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இதுமட்டுமின்றி, அவர் உயரத்திற்கான ஒன்பது மீட்டர் ஆடைகளை தைப்பதும் பெரும் சவாலாகத் தான் அவருக்கு இருந்து வருகிறது.
இத்தகைய பிரச்சினைகளில் தவிக்கும் தர்மேந்திராவை, வறுமையும் அதன் பங்கிற்கு வாட்டி வதைக்கிறது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வேலையின்றி தவிக்கும் தர்மேந்திரா, உபி அரசின் உதவியை நாடியுள்ளார். ஆனால் இதுவரை அவருக்கு எந்த உதவியும் அரசாங்கத்திடமிருந்து கிடைத்திடவில்லை. உயரத்தினால் பல மடங்கிற்கு புகழ் உயர்ந்துள்ள தர்மேந்திராவுக்கு, அதே உயரம் தான் பல்வேறு கஷ்டங்களுக்கும் வழிவகுக்கிறது.
இதையும் படிங்க: மேம்பாலத்தில் இருந்து சாக்கடையில் விழுந்த சமையல் தொழிலாளி!