கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கரோனாவுக்கு எதிராக களப்பணியாளர்கள் அயராது உழைத்து வருகின்றனர். அந்த வகையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் மில்க் பார் சவுக் (Milk Bar Chowk ) பகுதியில் காவல் துறையினர் தடுப்பு அமைத்து அவ்வழியில் வரும் வாகனங்களை கண்காணித்து வந்தனர்.
அப்போது, அவ்வழியே வந்த காரை உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் நிறுத்த முயன்றார். ஆனால், காரை ஓட்டி வந்த இளைஞர் காவல் துறையினர் பிடித்துவிடுவார்கள் என்ற பயத்தில் காரை நிறுத்தாமல் தடுப்புகளிடையே புகுந்து சென்றுள்ளார்.
அதுமட்டுமின்றி, தடுப்புகளுக்குள் நடுவே நின்ற உதவி காவல் ஆய்வாளரையும் காரின் முன்பகுதியில் அலேக்காக தூக்கி சென்றுள்ளார். இதைப் பார்த்த மற்ற காவலர்கள், காரை பின் தொடர்ந்து காரை நிறுத்தச்சொல்லி சத்தம் போட்டுக்கொண்டே ஓடினார். சிறிது தூரம் சென்ற கார் கடைசியாக ஓரிடத்தில் நின்ற பிறகுதான் ஆய்வாளர் நிம்மதியடைந்தார்.
இதையடுத்து, காரிலிருந்து இளைஞரை வலுக்கட்டாயமாக இறக்கிய காவல் துறையினர், சாலையிலேயே அடித்தது மட்டுமின்றி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க: சொமேட்டோ பையில் வைத்து கஞ்சா விற்ற நபர் கைது!