பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே கருத்து மோதல் வெடிப்பது வழக்கமான ஒன்று. குறிப்பாக, இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலின்போது பாஜக தலைவர்கள் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்தனர். கரோனாவை மத்திய அரசு சரியாக கையாளவில்லை என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு சுமத்தினார்.
இந்நிலையில், கெஜ்ரிவால் ஒரு படித்த நக்சல் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதூரி சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பதர்பூரில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து இருவர் உயர்ந்துள்ளனர். இதனை காரணம்காட்டி கெஜ்ரிவாலை விமர்சித்த பிதூரி, "டெல்லி மக்களின் வாழ்க்கையில் விளையாடி கெஜ்ரிவால் அவர்களை ஏமாற்றிவருகிறார்.
கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்திருந்தாலும் தொழிலாளர்களின் நலனின் கெஜ்ரிவாலுக்கு அக்கரை இல்லை. டெல்லி அரசின் கட்டுப்பாட்டின் கீழ்தான் குடிநீர் வாரியம் வருகிறது. கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்துவது மாநில அரசின் கடமை. டெங்கு, மலேரியா போன்ற நோய்களை டெல்லி அரசு கட்டுப்படுத்திவிட்டதாக விளம்பரம் செய்துகொள்கிறது. டெல்லி மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகளின் மூலமாகவே இந்த நோய்கள் கட்டுக்குள் வந்தது.
கரோனாவை பரவலை கட்டுப்படுத்த கெஜ்ரிவால் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.
இதையும் படிங்க: ஒப்புதலின்றி தகனம் செய்தார்கள் - ஹத்ராஸ் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் வாக்குமூலம்