மத்திய முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி (66) சுவாசக் கோளாறு காரணமாக ஆகஸ்ட் 10ஆம் தேதியில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று உடல்நிலை கவலைக்கிடமானதால் அவருக்கு எக்மோ(ExtraCorporeal Membrane Oxygenation) என்று கூறப்படும் உயிர்காக்கும் கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதனிடையே, நேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எய்ம்ஸ் மருத்துவனைக்கு வந்து, அருண் ஜேட்லியின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்துவிட்டுச் சென்றார்.
கடந்த சனிக்கிழமையன்று பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், மேலும் பல அரசியல் தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவனைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
இதனிடையே, நள்ளிரவில் அருண் ஜேட்லி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது. அவரை மருத்துவர்கள் அதி தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.