சென்னை ஐஐடியின் வருடாந்திர நிகழ்வான சாஸ்திரா, ARTribute எனும் இணையதளத்தை உருவாக்கி கரோனா காலங்களில் முன்னணியில் நின்று வேலைப்பார்க்கும் ஊழியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, விழிப்புணர்வு போட்டிகள் நடத்துகிறது.
ஆர்வமுள்ளவர்கள், அவர்களின் கலைப்படைப்புகளை சமர்ப்பிக்க வேண்டும். புகைப்படம் எடுத்தல், மல்டிமீடியா, ஓவியங்கள் போன்றவை அனைத்து கோவிட்-19 வீரர்களுக்கும் அர்ப்பணிக்கும் விதமாக இருக்க வேண்டும். இந்தப் போட்டிகளில் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
வாராந்திர வெற்றியாளர்களின் விவரங்கள் இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடப்படும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு artribute.shaastra.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.