ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கியது.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதலமைச்சர்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
மெகபூபா முஃப்தி கட்சியைச் (பிடிபி) சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அஜாஸ் மிர், காஷ்மீர் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் கடந்த நவம்பர் மாதம் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார். இதேபோல் வியாபாரி சங்கத் தலைவர் ஷகீல் ஹலந்தர் மத்திய சிறையில் சிறைவைக்கப்பட்டார். தற்போது அங்கு நிலைமை சீரடைந்துவரும் நிலையில் இருவரும் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் தவிர இன்னும் 16 பேர் வீட்டுக்காவலில் உள்ளனர். ஓமர் அப்துல்லா, ஹரி நிவாஸ் பகுதியிலுள்ள அவரது வீட்டிலும் மெகபூபா முஃப்தி ஸ்ரீநகர் எம்.ஏ. சாலையிலுள்ள அவரது வீட்டிலும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மகாத்மா மீது உண்மையான அன்பிருந்தால் பிரக்யாவை நீக்குங்கள்: கே.சி. வேணுகோபால்