ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
நிலைமையை உணர்ந்து சுதாரித்துக்கொண்ட இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி அவர்களை திருப்பி அனுப்பியதாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதில் தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பிலும் சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என்று தெரிவித்த இந்திய ராணுவம், அதன் விவரங்கள் குறித்த தகவல் தெரியவில்லை எனக் கூறியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் அங்குள்ள கிராமங்களில் உள்ள குடியிருப்புவாசிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். ஜம்முவில் அமைந்துள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இந்தாண்டு ஆகஸ்ட் 31 வரை மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட முறை அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஏர் இந்தியாவை விற்க வேண்டும் அல்லது இழுத்து மூட வேண்டும் - கைவிரித்த மத்திய அமைச்சர்