காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தெலங்கானாவில் கொட்டிவரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்ததால் தத்தளித்துவருகின்றன. இதனால் தலைநகர் ஹைதராபாத் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
சாலைகள், பாலங்கள், தாழ்வான இடங்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. ஹைதராபாத் மட்டுமின்றி, பண்ட்லகுண்டா, ரங்காரெட்டி, யதாத்ரி புவனகிரி உள்ளிட்ட மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகளில் ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது ராணுவத்தினரும் களமிறங்கியுள்ளனர். மாநில அரசின் கோரிக்கையினை ஏற்ற ராணுவம், பண்ட்லகுடா பகுதியில் வெள்ள நிவாரணம், மீட்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றது.
இதில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்ட ராணுவத்தினர், அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி உனவின்றி தவித்த பல மக்களுக்கு உணவு பொட்டலங்களும், மருத்துவ உதவிகளையும் ராணுவத்தினர் செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க...ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை: நிலைமையை கண்காணிக்கும் மத்திய அரசு!