ETV Bharat / bharat

டெல்லியில் ராணுவ மருத்தவருக்கு கரோனா பாதிப்பு - delhi army doctor corona

டெல்லி: ராணுவ மருத்தவர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடன் தொடர்பிலிருந்த 18 மருத்துவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

COVID 19
COVID 19
author img

By

Published : Apr 15, 2020, 9:53 AM IST

டெல்லியில் உள்ள ராணுவ அலுவலகத்தில் பணிபுரிந்துவரும் மருத்துவர் ஒருவருக்கு தற்போது கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தகவலின்படி கரோனா பாதிக்கப்பட்ட மருத்தவருடன் 18 மருத்தவர்கள், நேரடி தொடர்பில் இருந்தததாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் மருத்தவரின் மனைவி, மகள், அவருடன் வேலைபார்க்கும் ராணுவ அலுவலர் ஆகியோரும் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர் பணிபுரியும் அலுவலகம் தூய்மைப்படுத்தப்பட்டு, வரும் 19ஆம் தேதி வரை சீல் வைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இதுவரை 1,561 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பாதிப்பு காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: குஜராத் முதலமைச்சரை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.