ETV Bharat / bharat

இருநாட்டுப் படைகள் மோதிக்கொண்ட இடத்திற்கு வந்த ராணுவத் தளபதி! - தெற்கு பிளாக்

டெல்லி: இருநாட்டு லெப். ஜெனரல்களும் படைகளை விலக்கிக் கொள்வதாக மோல்டோவில் ஒப்புக் கொண்டதை அடுத்து இந்தியா-சீனா மோதல் நடந்த இடத்திற்கு ராணுவ தளபதி வருகைதந்தார்.

India China faceoff  Army Commanders’ Conference  General Manoj Mukund Naravane  Ground Zero  de-escalation  Galwan valley clash  Sanjib Kr Baruah  மனோஜ் முகுந்த் நரவானே  இந்தியா சீனா மோதல் நடந்த இடம்  இந்திய ராணுவ தளபதி  தெற்கு பிளாக்  ராணுவத் தளபதிகள் மாநாடு
இருநாட்டுப் படைகள் மோதிக்கொண்ட இடத்திற்கு வந்த ராணுவத் தளபதி
author img

By

Published : Jun 25, 2020, 7:08 AM IST

செவ்வாய்க்கிழமை பிற்பகல் தெற்கு பிளாக்கில் நடைபெற்ற ராணுவத் தளபதிகள் மாநாடு (ஏ.சி.சி.) கூட்டம் முடிந்ததும், இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவணே ஒரு ராணுவ விமானத்தில் புறப்பட்டு கிழக்கு லடாக்கில் இருநாட்டுப் படைகள் மோதிக்கொண்ட இடத்தை (கிரவுண்ட் ஜீரோ) அடைந்தார்.

நமது ஈடிவி பாரத்திற்கு கிடைத்த தகவலின்படி, ராணுவத் தளபதிக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையை மறுபரிசீலனை செய்ய குறிப்பாக ஜூன் 15 கல்வான் பள்ளத்தாக்கு வன்முறை சம்பவத்தின் பின்னணி, முன்னேறிய பகுதிகளைப் பார்வையிடல், படைவீரர்களுடன் பேசுதல் போன்ற மூன்றுவித நிகழ்ச்சி நிரல்கள் இருந்தன.

நாட்டின் தலைநகர் டெல்லி தெற்கு பிளாக்கில் நடந்த இரண்டு நாள் ராணுவத் தளபதிகள் மாநாடு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கிழக்கு லடாக்கின் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள், ராணுவத்தின் படை விலக்கம் போன்றவற்றை ஜெனரல் நரவணே லடாக்கில், இந்திய ராணுவத்தினருடன் பகிர்ந்துகொள்வார்.

ஏற்கனவே சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு நகர்வுகளைக் கண்காணித்ததைத் தொடர்ந்து தரைப்படை, கடற்படை, விமானப்படை உள்ளிட்ட இந்திய ராணுவம் மிகுந்த எச்சரிக்கையுடன் வானத்தில், நிலத்திலும், கடலிலும் ராணுவ வளங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதற்கிடையில், திங்களன்று இந்திய, சீனப் படைகளின் லெப்டினன்ட்-ஜெனரல் அலுவலர்களுக்கிடையேயான ஜூன் 6-க்கு பிறகு நடந்த இரண்டாவது பேச்சுவார்த்தை கிழக்கு லடாக்கில் உள்ள சீனப்பகுதியான சுஷுல் என்ற இடத்தில் உள்ள மோல்டா பகுதியில் 11 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

ஆனால் கூட்டம் மாரத்தான் ஓட்டம் போல நீண்டிருந்தாலும், படை விலக்கம் பற்றிய வழிமுறை, படை குறைப்பு, தற்போது என்ன நடக்கிறது என்பதை பற்றி ஜூன் 6 நடந்த பேச்சுவார்த்தையைப் போல இதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

"படைகளை விலக்கி கொள்வதில் பரஸ்பர ஒருமித்த கருத்து இருந்தது. கிழக்கு லடாக்கில் உள்ள மோதல் ஏற்படும் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் படைகளை விலக்கிக் கொள்வதற்கான வழிமுறைகள் விவாதிக்கப்பட்டன. அவை இருதரப்பினராலும் கடைப்பிடிக்கப்படும்” என்று ராணுவ வட்டாரங்கள் கூறின.

நீண்டநேரம் நடந்த கூட்டம் குறித்து கேட்கப்பட்டபோது, ​​இந்திய, சீனப் படைகள் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையேயான நடைமுறை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் ஐந்து சந்திப்பு புள்ளிகளில் இந்திய, சீனப் படைகள் சந்திப்பது பற்றிய கூட்டங்கள் பொதுவாக மிக நீண்டதாக இருக்கும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

"இந்தக் கூட்டங்களில் ஒவ்வொரு அம்சமும் குறைந்தது நான்கு முறை விவாதிக்கப்பட்டன. கேள்விகள், பதில்களை மொழிபெயர்த்து மீண்டும் சொல்லும் இரு மொழிபெயர்ப்பாளர்களும் இருபுறமும் இருந்தனர். மேலும், ஒரு விரிவான ராணுவ நெறிமுறை பின்பற்றப்பட்டது. வழக்கமாக, இன்னும் தீர்க்கப்படாத எல்லைப் பிரச்னை, ரோந்துக்கு இடையில் அடிக்கடி நேருக்கு நேர் சந்திப்பது போன்ற விவாதிக்கப்பட வேண்டிய நிறைய விஷயங்கள் இருப்பதால், இந்திய-சீன ராணுவ எல்லைக் கூட்டங்கள் அதிக நேரம் நடக்கும்" என அந்த வட்டாரம் மேலும் கூறின.

நடைமுறை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் தெளிவான எல்லை நிர்ணயம் இல்லாததால் எல்லையில் சர்ச்சைகளைத் தணிக்க, இரு படைகளின் தளபதிகள் இந்திய தரப்பு எல்லையில் சுஷூலைத் தவிர தவுலத் பேக் ஓல்டி (லடாக்), நாது-லா (சிக்கிம்), பம்-லா, கிபித்து (அருணாச்சலப் பிரதேசம்) ஆகிய ஐந்து புள்ளிகளில் தவறாமல் சந்திக்கின்றனர்.

தற்போது, உலகின் இரண்டு பெரிய படைகள் பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, வெப்ப நீரூற்று உள்ளிட்ட சில நிலைகளில் ஒருவருக்கொருவர் எதிர்கொள்கின்றனர்.

ஆனால் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவ படையினரால் ஜூன் 15 அன்று நடத்தப்பட்ட மிகப் பெரிய வன்முறைத் தாக்குதலில் கமாண்டிங் அலுவலர் உள்பட 20 இந்திய வீரர்கள் உயிர் இழந்திருந்தாலும் ஜூன் 6 முதல் 22ஆம் தேதி வரையிலான இந்த 16 கொந்தளிப்பான நாள்களில், இருதரப்பு படையினரும் ஒரு பெரிய நெருக்கடியைத் தவிர்த்தனர்.

இந்திய தரப்பு உயிரிழப்புகள் அறியப்பட்டாலும், சீன அலுவலர்கள் அந்நாட்டு ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை குறித்து இப்போதுவரை மௌனம் சாதிக்கின்றனர்.

இதையும் படிங்க: 2008இல் சீனாவுடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்: சோனியா, ராகுலை விசாரிக்க மனு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.