ETV Bharat / bharat

மூன்று நாள் பயணமாக நேபாளம் சென்றடைந்தார் எம்.எம்.நரவனே - நேபாளம் எம்.எம்.நரவனே

காத்மண்டு: இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே மூன்று நாள் பயணமாக நேபாளம் சென்றுள்ளார். இந்திய-நேபாள எல்லையில் நிலவிவரும் முக்கிய பிரச்னைகள் குறித்தும், நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

MM Naravane
MM Naravane
author img

By

Published : Nov 4, 2020, 4:36 PM IST

இந்தியா - நேபாளம் இடையிலான பாதுகாப்பு துறை உள்ளிட்ட ஒட்டுமொத்த உறவுகளையும் வலுப்படுத்தும் நோக்கில் மூன்று நாள் பயணமாக இன்று (புதன்கிழமை) இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே நேபாளத்திற்கு சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி வீணா நரவனேவும் சென்றுள்ளார்.

திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் எம்.எம்.நரவனேவை நேபாள லெப்டினென்ட் ஜெனரல் பிரபு ராம் வரவேற்றார். இந்திய-நேபாள எல்லையில் நிலவிவரும் முக்கிய பிரச்னைகள் குறித்தும், நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இருநாட்டு ராணுவ அலுவலர்களுடனும், உயர்நிலை அலுவலர்களுடனும் இந்த சந்திப்பில் விரிவான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

மேலும், நேபாள ராணுவ தளபதி ஜெனரல் பூர்ணா சந்திர தாபாவை இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவனே சந்திக்க இருக்கிறார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் எம்.எம்.நரவனே நாளை மரியாதை செலுத்த உள்ளார். பிறகு அதிபர் மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அங்கு நரவனேவுக்கு அதிபர் வித்யாதேவி பண்டாரி நேபாள ராணுவத்தின் கவுரவ பதவி வழங்கவுள்ளார்.

நேபாள பிரதமர் சர்மா ஒலியை நரவானே வெள்ளிக்கிழமை சந்தித்து பேசுகிறார். இரு தரப்பு உறவை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பாக இந்த சந்திப்பு அமையும் என கூறப்படுகிறது.

முன்னதாக, எம்.எம். நரவனே வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்த சந்திப்பின் மூலம் இருதரப்பு ராணுவத்தினரின் நட்பு நீண்ட தொலைவு செல்லும் என்று நான் நம்புகிறேன். நேபாள பிரதமரை சந்திக்க கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நரவனேவை கௌரவிக்கும் நேபாளம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.