சர்ச்சைக்குரிய இந்தியா - சீனா எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளும் இந்திய ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, அதன் அறிக்கையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூன் 15ஆம் தேதியன்று லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா வீரர்களுக்கு இடையே வெடித்த மோதலில் இந்திய வீரர்கள் 20 வீரர்கள் உயிரிழந்தனர்.
சீனத் தரப்பில் 43 பேர் உயிரிழந்ததாக இந்திய பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.