ETV Bharat / bharat

காஷ்மீரில் நிலங்களை ராணுவம் கையகப்படுத்த இனி அனுமதி கோர வேண்டியதில்லை!

ஸ்ரீநகர்: பாதுகாப்பு படையினரின் கட்டுமான நடவடிக்கைகளுக்கு மாநில அரசிடமிருந்து ஆட்சேபனை இல்லா சான்றிதழை (NoC) பெற பரிந்துரைக்கும் ஜம்மு-காஷ்மீர் வருவாய் துறையின் சுற்றறிக்கையை நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் நிலங்களை ராணுவம் கையகப்படுத்த இனி அனுமதி கோர வேண்டியதில்லை!
காஷ்மீரில் நிலங்களை ராணுவம் கையகப்படுத்த இனி அனுமதி கோர வேண்டியதில்லை!
author img

By

Published : Jul 28, 2020, 10:11 PM IST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு தகுதி வழங்கும் சட்டப்பிரிவுகளை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மத்திய அரசு திரும்பப்பெற்றது. அத்துடன் அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதனையடுத்து மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் சட்டப்பேரவை அல்லாத லடாக் என்ற யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்ற தகுதிக்குள் கொண்டுவரப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு சட்டவிதிகள் மற்றும் தடைகள் அமலுக்கு வந்தது. இணையம் மற்றும் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டது.

ஸ்ரீநகர் உள்ளிட்ட அம்மாநிலத்தின் பல பகுதிகள் முள்வேலிகளால் சுற்றி வளைக்கப்பட்டன. நகரத்தின் முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடந்த ஓராண்டிற்கும் மேலாக இந்நிலை தொடர்கிறது.

இதன் ஒரு பகுதியாக, அங்கு நடைமுறையில் இருந்த ஜம்மு-காஷ்மீர் வருவாய்துறையினரின் 1971ஆம் ஆண்டு சுற்றறிக்கையை நீக்கம் செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 27, 1971 தேதியிட்ட சுற்றறிக்கையின்படி, " இராணுவம், எல்லை பாதுகாப்பு படைகள், மத்திய ரிசர்வ் பொலிஸ் படை மற்றும் இதே போன்ற அமைப்புகள் ஜம்மு-காஷ்மீரில் நிலங்களை கையகப்படுத்த வருவாய் துறையின் என்.ஓ.சி சான்றிதழைப் பெற்ற வேண்டும்" என்ற நடைமுறை இருந்து வந்தது.

இந்நிலையில், யூனியன் பிரதேச நிர்வாக சபையின் சட்டங்களை மாற்றியமைக்கும் அதிகாரத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

இந்த உத்தரவின்படி, மத்திய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் ஆட்சியர் நிலம் கையகப்படுத்த நியமிக்கப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் அதிகாரம் வழங்கப்படும். 1956 ஆம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தகுதிவாய்ந்த நிலங்களை கையகப்படுத்தும் அதிகாரம் (CALA) ஆயுதப்படைகளின் கையகப்படுத்துதல்களைச் செயல்படுத்த உரிமை உள்ளதாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும், நிலங்களைக் கையகப்படுத்துவதற்காக யூனியன் பிரதேச அரசு எந்தவொரு ஆட்சேபனை சான்றிதழையும் அளிக்க பரிந்துரைக்க வேண்டியதில்லை என தெரிகிறது.

இதன் மூலமாக பாதுகாப்புப் படையினரின் படை கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அடுத்துவரும் சில நாள்களில் பல்வேறு இடங்களில் அனுமதி வழங்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் ஆயுதப் படைகளின் தேவைக்கேற்ப சில பகுதிகளில் கட்டுமான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ஒரு சிறந்த ஆட்சி நிர்வாகத்தை வழங்க முடியுமென அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

முன்னதாக, ஜூலை 18ஆம் தேதியன்று துணை நிலை ஆளுநர் ஜி.சி.முர்முவின் தலைமையில் நடைபெற்ற நிர்வாக கவுன்சில் கூட்டத்தில், 1988 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கட்டட நடவடிக்கைக் கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மேம்பாட்டுச் சட்டம் (1970) ஆகியவற்றைத் திருத்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீரை இராணுவத்தின் தங்குமிடமாக மாற்றவும், காஷ்மீரிகளின் உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் இத்தகைய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக அரசியல் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.