மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகின்ற ஜூன் முதல் வாரத்துடன் நிறைவடைய இருக்கும் நிலையில், இந்தியா முழுவதும் வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என பாஜகவும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.
இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் வெளிப்படையாகவேத் தெரிவித்துள்ளார்.
அம்மாநிலத்தில் 10 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கிறது. அங்கு பாஜக ஆளும் கட்சியாக இருப்பதால், காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி அமைத்தால் எளிதில் வெற்றி பெற முடியும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.