ETV Bharat / bharat

ஹிமாச்சலில் ஆப்பிள் உற்பத்தி 30 விழுக்காடு சரிவு! - ஹிமாச்சல் ஆப்பிள் உற்பத்தி சரிவு

சிம்லா: கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ஹிமாச்சல பிரதேசத்தில் ஆப்பிள் உற்பத்தி 30 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

apple
apple
author img

By

Published : Nov 10, 2020, 4:50 PM IST

Updated : Nov 10, 2020, 4:58 PM IST

ஜம்மு-காஷ்மீருக்குப் பிறகு நாட்டில் ஆப்பிள் உற்பத்தியில் ஹிமாச்சல பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தின் ஆப்பிள் பொருளாதாரம் 4000 கோடி ரூபாய் மதிப்புடையது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4% பங்களிக்கிறது. 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வகை ஆப்பிள்கள் வளர்க்கப்படுகின்றன. சிம்லாவில் தான் 80 விழுக்காடு ஆப்பிள் உற்பத்தி நடைபெறுகிறது.

கடந்தாண்டு ஹிமாச்சலத்தில் 30 மில்லியன் பெட்டி ஆப்பிள்கள் உற்பத்தி செய்யப்பட்டன, ஆனால், இந்தாண்டு 27 மில்லியன் பெட்டிகளாக குறைக்கப்பட்டன. கணக்கிட்டதில், ஹிமாச்சலில் இந்தாண்டு ஒரு கோடி பெட்டிகளின் உற்பத்தி குறைந்துள்ளது.

இந்த முறை ஆப்பிள் உற்பத்தி குறைக்கப்பட்டதற்கு முக்கிய காரணமானது, விவசாயிகளுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, பல விதமான பிரச்னைகளை விவசாயிகள் எதிர்க்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், கின்னார் மாவட்டத்தில் ஆப்பிள் பயிருக்கு அதிக சேதம் ஏற்பட்டது. ஆப்பிள் உற்பத்தியை அதிகமாகக் கொண்ட சிம்லா மாவட்டத்தில் இருந்து மண்டி, குலு, சம்பா மற்றும் சிர்மலா வரையிலான பயிற்களை ஸ்கேப் நோய் தாக்கியதில் அழிந்துள்ளது. இதனால்தான், உற்பத்தி சரிவை சந்தித்துள்ளது.

ஸ்கேப் நோய் என்றால் என்ன?

ஸ்கேப் நோய் ஆப்பிள்களில் புற்றுநோய் போன்றது. இந்த நோய் முதலில் ஆப்பிள் மரத்தின் இலைகளைத் தாக்குகிறது. இந்த நோயால் ஆப்பிள் பழம் பாதிக்கப்பட்டால், விலங்குகள் கூட அந்த பழத்தை சாப்பிடுவதில்லை. முன்னதாக, இந்த நோய் ஹிமாச்சல பிரதேசத்தில் 1984-இல் அதிகளவில் பரவியது குறிப்பிடத்தக்கது.

ஹிமாச்சலில் ஆப்பிள் தயாரிப்பு:

ஆண்டு உற்பத்தி

2007 - 29.9 கோடி பெட்டிகள்

2008 - 25.5 கோடி பெட்டிகள்

2009 - 1.40 கோடி பெட்டிகள்

2010 - 4.46 கோடி பெட்டிகள்

2011 - 1.38 கோடி பெட்டிகள்

2012 - 1.84 கோடி பெட்டிகள்

2013 - 3.69 கோடி பெட்டிகள்

2014 - 2.80 கோடி பெட்டிகள்

2015 - 3.88 கோடி பெட்டிகள்

2016 - 24.5 கோடி பெட்டிகள்

2017 - 2.08 கோடி பெட்டிகள்

2018 - 1.65 கோடி பெட்டிகள்

2019 - 3.75 கோடி பெட்டிகள்

2020 - 2.70 கோடி பெட்டிகள்

Last Updated : Nov 10, 2020, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.