ETV Bharat / bharat

'தினமும் 1 மில்லியன் கரோனா தடுப்பூசிகளை விநியோகம் செய்வோம்' - அப்போலோ அறிவிப்பு! - கரோனா வைரஸ்

டெல்லி: கரோனா தடுப்பூசி மருந்து கிடைக்கும்பட்சத்தில், தினமும் 1 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை விநியோகம் செய்வோம் என அப்போலோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

தடுப்பூசி மருந்து
தடுப்பூசி மருந்து
author img

By

Published : Nov 25, 2020, 1:34 PM IST

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன. இந்நிலையில், கரோனா தடுப்பூசி மருந்து கிடைக்கும் பட்சத்தில், தினமும் 1 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை விநியோகம் செய்வோம் என அப்போலோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில்," இன்னும் 60 முதல் 120 நாட்களுக்குள், கரோனா தடுப்பூசி இந்தியா வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தடுப்பூசிகளை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கு தேவைப்படும் வசதிகளை அப்போலோ குழுமம் மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் எங்கள் குழுமத்திற்கு சொந்தமான மருத்துவமனைகள், கிளினிக்குகள், மெடிக்கல் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பேருக்கு எங்கள் குழுமத்தால் தடுப்பூசி செலுத்த முடியும்.

தடுப்பூசி கிடைக்கும் பட்சத்தில் அதனை வாங்குவீர்களா என்ற கணக்கெடுப்பும் எங்களின் மருத்துவமனை சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் கோவிட் -19 தடுப்பூசி எடுப்பீர்களா? கோவிட் -19 தடுப்பூசி கிடைத்தவுடன் எவ்வளவு விரைவில் எடுத்துக்கொள்வீர்கள்?" என்ற கேள்விகளும் கணக்கெடுப்பில் இடம்பெற்றிருந்தது. கரோனா தடுப்பூசி தேவைப்படும் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் எண்ணை அப்போலோ இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் கரோனா மருந்து தொடர்பான தகவல்கள் முதலில் கிடைக்கக்கூடும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.