அயோத்தி சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், மாற்று இடத்தில் மசூதி கட்டுவதற்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சென்ற மாத தொடக்கத்தில் அயோத்தியில் ராம்லல்லா கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தன்னிப்பூர் கிராமத்தில் கட்டப்படவுள்ள மசூதிக்கு கட்டடக்கலை வடிவமைப்பாளரும், டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா (ஜேஎம்ஐ) பல்கலைக்கழக பேராசிரியருமான எஸ்.எம்.அக்தாரிடம் ஈடிவி பாரத் சார்பாக பேசினோம்.
அதில், "அயோத்தி மசூதியில் சுகாதாரம், கல்வி தொடர்பான பிற வசதிகளும் கட்டப்படவுள்ளது. ஐந்து ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் மசூதி குறித்து இன்னும் இறுதியான வடிவமைப்பை உருவாக்கவில்லை. இது குறித்து தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது'' என்றார்.
இதையும் படிங்க...நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் - காங்கிரஸ்