ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து ஓட்டுனர் ஒருவர் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவியிடம் தவறாக நடந்தார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அப்பகுதியில் கூடிய கிராம மக்கள், பள்ளி ஓட்டுனரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும் அந்த பள்ளிப் பேருந்தையும் தீயிட்டு கொளுத்தினர்.
இது சம்பவத்தை அறிந்த காவல் துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து ஓட்டுனரை மக்களிடமிருந்து மீட்டனர். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மேலும் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354 (பெண்களுக்கெதிரான பாலியல் உள்ளிட்ட குற்றங்கள்) மற்றும் பாலியல் குற்றங்களில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு (POCSO) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க : ஜம்மு முன்னாள் முதலமைச்சர்கள் மீது பொது பாதுகாப்புச் சட்டத்தில் வழக்கு!