ETV Bharat / bharat

தலிபான் அமைதி ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு ஆபத்தில்லை-அமைதி தூதர் உறுதி - ஆப்கான் அமைதித்தூதர் அப்துல்லா அப்துல்லா

ஆப்கான்-தலிபான் அமைதி ஒப்பந்தத்தால் இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பு ஏற்படாது என ஆப்கான் அமைதித்தூதர் அப்துல்லா அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அப்துல்லா அப்துல்லா
அப்துல்லா அப்துல்லா
author img

By

Published : Oct 11, 2020, 7:52 AM IST

இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையே நல்லுறவை மேம்படுத்தும் விதமாக ஆப்கானிஸ்தான் தூதர் அப்துல்லா அப்துல்லா ஐந்து நாள் பயணமாக இந்தியா வருகை தந்தார். பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரைச் சந்தித்தார்.

இந்த பயணம் குறித்து அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் காலூன்றுவதை நாங்கள் விரும்பவில்லை. ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டவே தலிபானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆப்கான் மக்களின் விருப்பத்திற்கு மாறாக எந்த செயல்பாட்டையும் அரசு மேற்கொள்ளாது.

இந்த அமைதி ஒப்பந்தம் எந்தவொரு நாட்டிற்கும் எதிரான விளைவை ஏற்படுத்தாது. குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக அது அமையாது என்பது உறுதி. ஆப்கானிஸ்தானின் முக்கியமான நட்பு நாடான இந்தியா, ஆப்கான் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளது என்றார்.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக ஏற்பட்டிருந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா-தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

இந்த அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, ஆப்கான் சிறையிலிருக்கும் தலிபான் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆயிரக்கணக்கான கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இவர்கள் மீண்டும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு சர்வதேச அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மத்தியில் நிலவிவருகிறது.

இதையும் படிங்க: கோவிட்-19 இரண்டாம் அலை: தாக்குப்பிடிக்க முடியாமல் தவித்துவரும் ஐரோப்பா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.