ETV Bharat / bharat

ஊழல் சங்கிலியை உடைப்போம்! - ஊழல் எதிர்ப்பு நாள்

ஹைதராபாத்: நாட்டின் வளர்ச்சியை செல்லரிக்கும் புற்றுநோயான ஊழல் சங்கிலியை உடைப்போம் என ஊழல் எதிர்ப்பு தின இந்நன்நாளில் (டிச.9) சபதம் ஏற்போம்.

Anti-Corruption day 2019: Need to unite against corruption

author img

By

Published : Dec 9, 2019, 4:54 PM IST

ஊழலக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி, சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலகின் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரானப் போராட்டத்தில் நாடுகள், குடிமக்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஒன்றுபட வேண்டும்.

2030ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் நிலையான இலக்கின்படி, ஊழலுக்கு எதிரான உலகளாவியப் போராட்டம் விலைமதிப்பற்ற வளங்களைக் காத்து, உலக மக்களுக்குச் சேவை செய்வதை உறுதி செய்வதாகும்.

இந்தியா 2006ஆம் ஆண்டில் ஐ.நா. மாநாட்டின் கையெழுத்திட்டது. அப்போது முதல் சர்வதேச ஊழல் தடுப்பு தினத்தை அனுசரித்து வருகிறது. ஊழலுக்கு எதிராக ஐ.நாவைப் பொறுத்தவரை, ஊழல் என்பது ஒரு சிக்கலான சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்வு ஆகும்.

இது அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. ஜனநாயகச் சான்றுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. பொருளாதார வளர்ச்சியைக் குறைக்கிறது மற்றும் அரசாங்கத்தின் உறுதியற்ற தன்மைக்குப் பங்களிக்கிறது.

மேலும் ஊழல் தேர்தல் செயல்முறைகளைத் தாக்குகிறது. அதிகாரத்துவத்தை அதிகரிக்கிறது. இதன் தாக்கம் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கிறது.

இதனால் சிறு வணிகர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். முதலீடு உணர்வு தடுக்கப்படுகிறது. இந்தக் குற்றத்தை எதிர்த்து அரசாங்கங்கள், தனியார் துறை, அரசு சாரா நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள குடிமக்கள் இணைய வேண்டும்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் (யு.என்.டி.பி), போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (யு.என்.ஓ.டி.சி) ஆகியவை இந்த முயற்சிகளில் முன்னணியில் உள்ளன.

ஐ.நா. தனது செய்தியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து விழுக்காடு - லஞ்சமாக செலுத்தப்படுகின்றன அல்லது ஊழல் நடைமுறைகள் மூலம் திருடப்படுகின்றன எனக் கூறியுள்ளது.

அவை சட்டத்தின் ஆட்சியை கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. மேலும் மக்கள், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை சட்டவிரோதமாகக் கடத்தும் குற்றங்களைத் தூண்டுகின்றன.

வரி ஏய்ப்பு, பணமோசடி மற்றும் பிற சட்டவிரோத பாய்ச்சல்கள் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்பிலிருந்து மிகவும் தேவையான வளங்களைத் திசை திருப்புகின்றன எனக் கூறியுள்ளது.

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின நாள் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு "ஊழலுக்கு எதிரான ஐக்கியம்" (United Against Corruption) என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது.

ஊழல் நடைபெறும் நாடுகள் பட்டியலில் இந்தியா 79ஆவது இடத்தில் உள்ளது. இந்தியச் சட்டத்தின்படி ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியருக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கலாம்.

இதுதவிர பணமோசடி தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளும் உள்ளன. இந்தச் சட்டங்கள் தவறிழைக்கும் அரசு மற்றும் அரசியல்வாதிகளுக்குத் தண்டனை அளிக்கின்றன.

வரும்காலங்களில் இந்தச் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற இந்தியாவின் கனவு வெறும் கனவாகவே இருக்கும்.

இதையும் படிங்க : ஆபாச இணைய தளங்களால் அதிகரிக்கும் விபரீத விளைவுகள்!

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/bharat/bharat-news/anti-corruption-day-2019-need-to-unite-against-corruption/na20191209002251440

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.