குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். இதற்காக பாதுகாப்பு படையினர் பல்கலைக்கழக வளாகம் வெளியே குவிக்கப்பட்டிருந்தனர்.
அமைதியாக பேரணி சென்ற மாணவர்களை காவல்துறையினர் ஒக்லாவில் உள்ள மருத்துவமனை அருகே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அனுமதி மறுத்த பிறகும் மாணவர்கள் பேரணி சென்றதால்தான் அவர்களை தடுத்தி நிறுத்தியதாக காவல்துறை தரப்பு தெரிவித்தது.
நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்வது எங்கள் உரிமை, பேரணியைத் தொடர்வோம் என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், ஜனவரி மாதம் 30ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான கோஷங்களை எழுப்பி ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இதுபெரும் சர்ச்சையாக மாறியது.
இதையும் படிங்க: சமஸ்கிருதம் செத்த மொழி - நாடாளுமன்றத்தை அலறவிட்ட தயாநிதி மாறன்