சீனாவில் தோன்றி உலகையே மிரட்டிவரும் கரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரம், குஜராத், மத்தியப் பிரதேசம், டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
இதனிடையே, மும்பை காவல் துறையில் காவலராகப் பணிபுரிந்து வந்த 57 வயது நபருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டு, மே 24ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று (மே 25ஆம் தேதி) உயிரிழந்தார்.
இதன்மூலம், கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக மும்பையில் உயிரிழந்த காவல் துறையினரின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை அம்மாநிலத்தில் 194 உயர் அலுவலர் உட்பட ஆயிரத்து 809 காவல் துறையினர் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 678 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதையும் படிங்க : வாரங்கல் கொலை: காதலித்த பெண்ணின் மகள் மீது மோகம்! கொலைக்கான காரணம் வெளியீடு