சீனாவில் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக வுஹான் நகரம், கரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்நிலையில், சீனாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்ட இரண்டாவது முறையாக ஏர் இந்தியா விமானம், நேற்று டெல்லி விமான நிலையத்திலிருந்து சீனா சென்றுள்ளது.
இது குறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மதியம் 12.50 மணியளவில் ஏர் இந்தியா விமானம் மீண்டும் வுஹான் புறப்பட்டுச் சென்றுள்ளது. சென்ற முறை சென்ற அதே மருத்துக்குழுவும் வேறொரு விமானக் குழுவும் சீனா சென்றுள்ளனர்" என்றார்.
முன்னதாக கடந்த ஜனவரி 31ஆம் தேதி இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் சீனா சென்றிருந்தது. அப்போது, வுஹான் நகரிலிருந்து 324 இந்தியர்கள் அழைத்துவரப்பட்டனர். அந்த 324 நபர்களில் 211 பேர் மாணவர்கள், 110 பேர் சீனாவில் தங்கி வேலை செய்துவந்தவர்களாகும். மேலும், மூவர் குழந்தைகள் ஆகும்.
நிதி திரட்டுவதற்காக மத்திய அரசு ஏர் இந்தியா விமானத்தை விற்க முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமோனியா கசிந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 300 பேர் வெளியேற்றம்