ETV Bharat / bharat

'திருக்குறளில் கூறப்பட்டுள்ள தகுதிகள் பிரதமர் மோடிக்கு உள்ளன' - முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை

author img

By

Published : Aug 25, 2020, 7:28 PM IST

திருக்குறளில் ஆட்சியாளர்களுக்கு இருக்கவேண்டியதாக கூறப்படும் அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய நான்கும் பிரதமர் மோடிக்கு இருப்பதாக முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஐபிஎஸ் அண்ணாமலை  தற்சார்பு அண்ணாமலை  ips annamalai  ex ips annamalai interview
'திருக்குறளில் கூறப்பட்டுள்ள தகுதிகள் பிரதமர் மோடிக்கு உள்ளன'- முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை

கர்நாடக காவல் துறையில் பணிபுரிந்த முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் அண்ணாமலை, இன்று (ஆகஸ்ட் 25) பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடிக்கு திருக்குறளில் கூறப்பட்டிருக்கும் தகுதிகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

இறைமாட்சி அதிகாரத்திலிருந்து, 'அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு' எனும் குறளைக் குறிப்பிட்டு பேசத் தொடங்கிய அவர், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும், நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கும் இருக்கவேண்டிய குணங்கள் குறித்து இக்குறள் பேசுவதாகவும், பிரதமர் மோடிக்கு அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய நான்கு பண்புகளும் குறைவில்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மோடி மட்டுமல்லாது, ஏனைய பாஜக தலைவர்களுக்கும் அந்த குணங்கள் இருப்பதால்தான் தான் பாஜகவில் இணைய விரும்பியதாகவும், பாஜகவை வலுப்படுத்த தன்னுடைய ஆற்றலையும் நேரத்தையும் செலவழிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் தேசப்பற்றை வளர்க்கவேண்டும் என பாஜக தேசியச் செயலாளர் குறிப்பிட்டு பேசியதை சுட்டிக்காட்டி, நேர்மையான தொண்டனாக பாஜகவுக்கு உழைப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எல். முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த இயக்குநர் தருண்கோபி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.