மகாராஷ்டிரா மாநிலத்தின் கடலோர மாவட்டமான பல்கரில் கடந்த 16ஆம் தேதி காரில் சென்றுகொண்டிருந்த இரண்டு சாதுக்கள் உள்பட மூன்று நபர்களை, குழந்தை கடத்தல்காரர்கள் என்று நினைத்து அப்பகுதி மக்கள் அடித்துக் கொலைசெய்தனர். இது தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை முன்வைத்து மதக் கலவரத்தை தூண்ட பல்வேறு தரப்பினர் முயற்சித்துவருகின்றனர். இதனிடையே மகாராஷ்டிரா உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக், கைதானவர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கைதுசெய்யப்பட்ட 100 பேரின் விவரங்களை வெளியிடுகிறேன். குறிப்பாக, இச்சம்பவத்தைப் பயன்படுத்தி மதக் கலவரத்தை தூண்ட முயற்சிப்பவர்களுக்காக இதனை வெளியிடுகிறேன். சமூக வலைதளத்தில் வெளியான வதந்திகளே சாதுக்களை அடித்துக் கொலை செய்வதற்கு காரணம். உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
पालघर की घटना में पुलिस हिरासत हुए १०१ लोगों की सूची यहाँ सांझा की जा रही है। जो विघ्नसंतोषी इस घटना को धार्मिक रंग देने की पूरी कोशिश कर रहे थे, वह इसे ध्यानपूर्वक पढ़ें...#ZeroToleranceForCommunalism#LawAndOrderAboveAll pic.twitter.com/o70b2YNHQq
— ANIL DESHMUKH (@AnilDeshmukhNCP) April 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">पालघर की घटना में पुलिस हिरासत हुए १०१ लोगों की सूची यहाँ सांझा की जा रही है। जो विघ्नसंतोषी इस घटना को धार्मिक रंग देने की पूरी कोशिश कर रहे थे, वह इसे ध्यानपूर्वक पढ़ें...#ZeroToleranceForCommunalism#LawAndOrderAboveAll pic.twitter.com/o70b2YNHQq
— ANIL DESHMUKH (@AnilDeshmukhNCP) April 22, 2020पालघर की घटना में पुलिस हिरासत हुए १०१ लोगों की सूची यहाँ सांझा की जा रही है। जो विघ्नसंतोषी इस घटना को धार्मिक रंग देने की पूरी कोशिश कर रहे थे, वह इसे ध्यानपूर्वक पढ़ें...#ZeroToleranceForCommunalism#LawAndOrderAboveAll pic.twitter.com/o70b2YNHQq
— ANIL DESHMUKH (@AnilDeshmukhNCP) April 22, 2020
வதந்திகளுக்கு மக்கள் இரையாக வேண்டாம். நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்களை உறுதிசெய்யுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார். இதனிடையே, இந்த வழக்கின் விசாரணையை சிஐடி தொடங்கவுள்ளது. கைதுசெய்யப்பட்ட 101 பேரின் காவல் ஏப்ரல் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 9 பேர் சிறார் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மத்திய ஆயுத காவல் படை வீரர் ஒருவருக்கு கரோனா