இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனையொட்டி ஆந்திர மாநிலத்தில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் ஆறு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனால், எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் வைத்தன. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் அய்யனா பத்ரா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், காவல்துறை அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களை அச்சுறுத்துவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற விசித்திரமான தேர்தலை இதுவரை சந்தித்ததில்லை. ஆந்திராவின் முதலமைச்சராக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா தொற்று பற்றிய எந்த அறிவும் இல்லை.
பாராசிட்டமல் மாத்திரை, கிருமி நாசினி தெளித்துவிட்டால் கொரோனா தொற்றை ஒழித்துவிட முடியும் என்று நம்புகிறார். கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: குமரியில் இளைஞர்கள் இருவருக்கு கொரோனா அறிகுறி