ஆந்திராவில் ஜி.என். ராவ் தலைமையிலான நிபுணர் குழுவின் அறிக்கை மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்களை பரிந்துரைத்து உள்ளது. இதையடுத்து, விவசாயிகள் தொடர்ந்து நான்காவது நாளாக எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அப்போது விவசாயிகள் கறுப்புக் கொடிகளுடன் அமராவதி தலைநகராக தொடர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
இதற்கிடையில், மண்டலம் என்ற கிராமத்தில் விவசாயிகள் தங்கள் டிராக்டர்களை நிறுத்தி சாலையை மறித்தனர். அவர்கள் தங்கள் மாடுகளையும் சாலையில் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜி.என். ராவ் அறிக்கையின்படி ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்களை உருவாக்க வேண்டும். அதே நேரத்தில் அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும் கர்னூல், விசாகப்பட்டினத்தில் தலா ஒரு அமர்வு வைத்து உயர் நீதிமன்றத்தின் கிளை கொண்டிருக்கும்.
சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை, குளிர்கால கூட்டத்தொடர் அமராவதி, விசாகப்பட்டினத்தில் நடைபெறும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க : அதிரடி காட்டும் ஜெகன் அரசு: ஆந்திராவில் திஷா சட்டம் நிறைவேற்றம்!