இதனைப் பலரும் பாராட்டி கொண்டிருக்கையில், மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திராவும் ஒரு ட்விட்டர் பதிவை ரீ-ட்வீட் செய்துள்ளார்.
ட்விட்டரில் மனோஜ் குமார் என்னும் நபர், அரசுப் பள்ளியைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் துர்கையைப் போல் காட்சி தரும் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதைப் பல தரப்பினரும் பாராட்டி கொண்டிருக்கும்போது, மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திராவும், அப்பதிவை கண்டு நெகிழ்ந்து, அதனை ரீ-ட்வீட் செய்தார். அதில், 'இது நான் கண்ட மிகப்பெரிய வியத்தகு நாடகமாகும். மனித ஆன்மா என்று வரும்போது, அதில் சிறுவர்கள் என்றுமே வெற்றிபெறுவார்கள்! இப்புனித நாளான மகா அஷ்டமி பூஜையன்று அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.