நாகாலாந்து மாநிலம் துயென்சாங் மாவட்டத்தின் கிழக்கே 132 கி.மீ. தொலைவில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் திங்கள்கிழமை ஏற்பட்டது. இதை ஐரோப்பிய - மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போதுவரை சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.8 ஆக ரிக்டர் அளவில் பதிவானது குறிப்பிடத்தக்கது.