வடக்கு குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பனாஸ் பால் அமைப்பு அமுலுடன் தொடர்புடையது. மேலும், ஆசியாவின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக திகழ்ந்து வருகிறது. இத்திட்டத்தில் பல கிராம பெண் தொழில் முனைவோர்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். அவர்களில் பத்து பேரை பாராட்டி அமுல் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
இது குறித்து அமுல் பால் தலைவர் ஆர்.எஸ்.சோதி, வெளியிட்டுள்ள அறிக்கையில், "2019-20ஆம் ஆண்டில் 2,21,595.6 கிலோ பால் விற்பனை செய்ததில் 87,95,900.67 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. பால் விற்பனையில் முதலிடத்தில் வகிக்கிறோம். ஏராளமான பெண்கள் கால்நடை வளர்ப்பை தங்கள் தொழிலாக எடுத்துக் கொண்டனர். இந்த பெண் தொழில்முனைவோர்கள் 2019-20ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள பாலை விற்பனை செய்துள்ளனர். இவர்கள் மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.