அதன்படி மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, ராம் ஜெத்மலானிக்கு இறுதி மரியாதை செலுத்தியுள்ளார். ராம் ஜெத்மலானியின் இழப்பு தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும், வாழ்க்கையில் ஒரு சிறந்த மனிதரை இழந்துவிட்டதாகவும் அமித் ஷா கூறியுள்ளார். இவரது மரணம் நீதித்துறைக்கு ஈடுசெய்ய முடியாத ஒன்று என்று சொன்ன அமித் ஷா, அவரது வாதாடும் திறமை என்றும் நினைவில் கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
![amitshah , vengaih naidu pay last respect to layer ram jethmalani](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4373388_amith.jpg)
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தான் ஒரு அன்பான நண்பரை இழந்துவிட்டதாகவும் காலம் ஒரு திறமையான வழக்குரைஞரையும் தேச பக்தரையும் இழந்துவிட்டது என்றும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். மேலும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
![amitshah , vengaih naidu pay last respect to layer ram jethmalani](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4373388_vengaiya.jpg)