ETV Bharat / bharat

அமித் ஷாவை பணிய வைத்த ஸ்டாலின்? உற்சாகத்தில் உடன்பிறப்புகள்!

அதுமட்டுமின்றி, அமித் ஷா விவகாரத்தில் ஸ்டாலினை அழைத்து ஆளுநர் பேசியதும், அதனையடுத்து அமித் ஷா விளக்கமளித்திருப்பதன் மூலமும் தேசிய அளவில் மு.க.ஸ்டாலினின் முக்கியத்துவம் வெளிப்பட ஆரம்பித்திருப்பதாக உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.

mk stalin
author img

By

Published : Sep 19, 2019, 9:29 PM IST

உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த நாட்டில் உள்ள அனைவரும் ஒரே மொழியைப் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு அனைவரையும் ஒருங்கிணைக்கும் மொழியாக இந்தி உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி தினத்தன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அவரது இந்த கருத்து மூலம், மத்திய அரசு இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க முயல்வது பட்டவர்த்தனமாக தெரிகிறது என எதிர்க்கட்சியினர் உட்பட பலர் கருத்து தெரிவித்தனர். மேலும், ட்விட்டரில் #StopHindiImposition, #தமிழ்வாழ்க போன்ற ஹேஷ்டேக்குகள் உலகளவிலும், இந்திய அளவிலும் ட்ரெண்டாகின. அதுமட்டுமின்றி திமுக தரப்பில் செப்டம்பர் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த சூழலில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திமுக தலைவர் ஸ்டாலினை அழைத்து அமித் ஷா கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது எனவும், இந்தித் திணிக்கப்படாது என்பதையும் மத்திய அரசின் பிரதிநிதியாக தான் உறுதியளிக்கிறேன் எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அமித் ஷா கருத்துக்கு எதிராக திமுக நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. திமுக எப்போதும் இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுக்கும் என ஸ்டாலின் கூறினார். இதற்கிடையே, உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்தி குறித்த தன்னுடைய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது எனவும், தானும் இந்தி பேசாத மாநிலத்திலிருந்துதான் வந்திருக்கிறேன் எனவும் விளக்கமளித்தார்.

இந்நிலையில், இந்தித் திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம் நடத்துவதற்கு முன்பே தமிழ்நாடு ஆளுநர் திமுக தலைவர் ஸ்டாலினை அழைத்து அமித் ஷா கூறிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது எனக் கூறியதும், அமித் ஷா விளக்கம் அளித்ததும் இந்தித் திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தாமல், தங்கள் கட்சியின் மூலம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றியாக திமுக உடன்பிறப்புகள் கருதுகின்றனர்.

அதுமட்டுமின்றி, இந்த விவகாரத்தில் ஸ்டாலினை அழைத்து ஆளுநர் பேசியதும், அதனையடுத்து அமித் ஷா விளக்கமளித்திருப்பதன் மூலமும் தேசிய அளவில் மு.க.ஸ்டாலினின் முக்கியத்துவம் வெளிப்பட ஆரம்பித்திருப்பதாக திமுகவினர் கூறுகின்றனர்.

ஆனால், ஏற்கனவே பொருளாதார மந்த நிலை விவகாரத்தில் மத்திய அரசு மீது நாடு முழுவதும் அதிருப்தி அலை நிலவிவருகிறது. இந்த சூழலில் இந்தித் திணிப்புக்கு எதிராக ஏதேனும் போராட்டம் நடந்தால், அதன் மூலம் பாஜகவுக்கு மேலும் அவப்பெயர் வரக்கூடும். அதைத் தவிர்க்கவே அமித் ஷா விளக்கமளித்தாரே ஒழிய ஸ்டாலினுக்கு அஞ்சி இல்லை என பாஜகவினர் முணுமுணுக்கின்றனர்.

இதையும் படிங்க:

தேசிய மொழியாகுமா இந்தி? - அமித் ஷா பேச்சால் சர்ச்சை

Intro:Body:மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பனிய வைத்த திமுக தலைவர் ஸ்டாலின். 

இந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம் நடத்துவதற்கு முன்பே தமிழக ஆளுநர் திமுக தலைவர் ஸ்டாலினை அழைத்து அமித் ஷா கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என விளக்கம் அளித்திருப்பது இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தாமல் தமிழகத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இன்றி அமித் ஷாவும் தன் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது தன் தாய்மொழியே இந்தி இல்லை என்று விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நாடு முழுவதும் ஒரே மொழி பேசும்போது தான் வெளிநாடுகளில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இது தமிழகம் மட்டும்  இன்றி இந்தி பேசா அனைத்து மாநிலங்களில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இதற்கு இடையில் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக சார்பில் செப்டம்பர் 20  ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திமுக தலைவர் ஸ்டாலினை அழைத்து அமித் ஷா கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது எனவும் மத்திய அரசின் பிரதிநிதியாக நான் உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார். மேலும் உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் தன் கருத்துக்கு விளக்கம் அளித்தார். இதனை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் திமுக நடத்தருந்த ஆர்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என கூறினார். ஆனால் திமுக எப்போதும் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுக்கும் என தெரிவித்தார்.

திமுக நடத்திருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டாலும் திமுக போராட்டம் நடத்தாமலே இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்பாட்டத்தில் வெற்றி பெற்றதாகவே பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு போன்ற பிரச்சனைகள் இருப்பதால் இந்தி திணிப்பு போன்ற ஆர்பாட்டம் நாட்டின் சட்ட ஒழுங்கை பாதிக்கும் என்பதாலும் அது பிஜேபி அரசுக்கு பின்னடைவாக இருந்திருக்கும் என்ற கருத்தும் உள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.