அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். அகமதாபாத்தில் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தை அவர் திறந்துவைக்கிறார்.
மேலும் நமஸ்தே ட்ரம்ப் பேரணியிலும் கலந்துகொள்கிறார். இதனால் குஜராத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோரை சந்தித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா திடீர் ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்திய வருகை குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையும் படிங்க: 'பாகிஸ்தான் வாழ்க' என கோஷமிட்ட மாணவிக்கு நக்சல்களுடன் தொடர்புள்ளது - கர்நாடக முதலமைச்சர்