கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணியிலான குமாரசாமி அரசு கவிழ்ந்தது. குறிப்பாக, காங்கிரஸ் கூட்டணி கட்சியிலிருந்து 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை அடுத்து, குமாரசாமி அரசின் பதவி பறிபோனது. அடுத்ததாக நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக வென்று, எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் எடியூரப்பா, ஆட்சி அமைத்ததில் இருந்து அமைச்சர்கள் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று காலை எடியூரப்பா, அமைச்சர்களின் பெயரை அறிவித்தார். இதையடுத்து பாஜகவில் 18 வயதில் இருந்து கட்சியில் இருக்கும் நளின் குமாரை மாநிலத் தலைவராக தேர்வு செய்யலாம் என்று அமித்ஷா அதிரடியாக முடிவு எடுத்தார். அதன் பின் கர்நாடக மாநிலத் தலைவராக நளின் குமாரையே நியமனம் செய்து, அமித்ஷா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது கர்நாடக அரசியல் அரங்கில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எடியூரப்பாவுக்கே அமித்ஷா அளித்திருக்கும் ஷாக் என அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்துரைத்து வருகின்றனர். தற்போது நளின் கர்நாடகாவில் உள்ள தட்சிண கன்னடா தொகுதி மக்களவை உறுப்பினராக உள்ளார்.
முன்னதாக சான்சத் தொகுதியில் மக்களவை உறுப்பினராக இரண்டு முறை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.